கந்தர்வக்கோட்டை பிப் 03:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்ச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்து சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கும், சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா நிகழ்வினை ஒருங்கிணைத்து பேசும்பொழுது தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்தி வருகிறது.
இம் மாநாட்டில் மாணவர்கள், மாணவிகள் பல்வேறு வகையான தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான ஆய்வு கட்டுரைகள் கருப்பொருள் நீடித்த நீர் மேலாண்மை என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனைப் பயன்படுத்தி அக்கச்சிப்பட்டி மாணவர்கள் சிவகார்த்திகேயன்,முகேஸ்வரன் உள்ளிட்டோர் குழுவாக அக்கச்சிப்பட்டியில் நீரின் பிஹெச் மதிப்பு அளவிடுதல் என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர். அக்கச்சிப்பட்டியில் உள்ள நீர் நிலைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் அக்கச்சிப்பட்டியில் உள்ள நீர் மக்கள் பயன்படுத்த பாதுகாப்பானது என்று சோதனை மூலம் அறிந்து கொண்டனர் .நீரின் முக்கியத்துவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீரை பாதுகாக்க கூடிய வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
என்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின் செல்விஜாய், வெள்ளைச்சாமி, ஜென்ம ராகினி சகாய ஹில்டா, கணிப்பொறி உதவியாளர் தையல் நாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஈஷா.