கோவை மாவட்டம் வால்பாறையில் ஜாக்டோ ஜியோ அமைப்பில் உள்ள சங்கங்கள் இணைந்து 10 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஸ்டார் மோர் சந்திப்பில் தலைமை ஆசிரியர் எம் பரமசிவம் தலைமையில், தலைமை ஆசிரியர் வசந்தகுமார், ராஜபாண்டியன், பாஸ்கரன் முன்னிலை வைத்து தொகுப்புரை ஆற்றினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிறப்புரையாக ஆசிரியர் கோதந்திர அய்யனார் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை செய்து தருகிறேன் உறுதியளித்தும் இன்று வரை செய்து தர மறுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்களின் ஜக்டோ ஜியோ அமைப்பின் சார்பாக 10 அம்ச கோரிக்கையை உடனடியாக செய்து தர வேண்டும் என்று பேசினார்.
இதைத்தொடர்ந்து வால்பாறை சி ஐ டி யு சங்கத்தின் பொதுச்செயலாளர் பி பரமசிவம் பேசிகையில் தமிழக அரசு தேர்தல் நேரத்தில் எளிதில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் அரசு ஊழியர்கள் மற்றும் சாமானிய மக்களின் கோரிக்கைகளை செய்து தருவோம் என்று கூறினார்கள். ஆனால் ஆட்சி பொறுப்பு ஏற்று இன்றுவரை அனைத்து தரப்பு மக்களும் சிரமப்படுகின்றன, வேதனைப்படுகின்றன குறிப்பாக அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் அடித்தட்டு மக்களின் கொண்டு சேர்ப்பது அரசு ஊழியர்களின் இன்றியமையாத வேலையாகும். இவர்களின் கோரிக்கையை வெறும் தேர்தல் அறிக்கை மட்டும் கொடுத்துவிட்டு இன்றுவரை பல பேர் போராட்டங்கள் நடத்தி தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்களோடு எப்பொழுதும் எங்கள் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க் லிஸ்ட் , சி ஐ டி யு தொழிற்சங்கமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராட்ட களத்தில் வெற்றி அடையும் வரை உடன் இருப்போம் தமிழக அரசால் சாதாரண சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினருக்கு, உள்ள சலுகை கூட அடிதட்டு மக்களுக்கு அரசின் திட்டங்களை எடுத்துச் செல்லும் அரசு ஊழியர்களே இந்த அரசு பழி வாங்குகிறது பணி செய்யும் இடத்தில் பாதுகாப்பு அடிப்படை வசதிகள் கிடையாது இதையெல்லாம் சரி செய்ய வேண்டுமென்றால் நீங்களும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் விலைமதிப்பற்ற வாக்குகளை விற்பனைக்கு அல்லாமல் நேர்மையான பிரதிநிதிக்கு உங்கள் வாக்குகளை பயன்படுத்துங்கள் அப்பொழுதுதான் அரசு ஊழியர்களும் அடித்தட்டு மக்களுக்கு உடையதாக இருக்கும் இல்லையென்றால் இதே நிலைமை தொடரும் உங்களோடு எப்பொழுதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்கள் 10 அம்ச கோரிக்கையை வென்றெடுக்க உறுதுணையாக இருப்போம் என்று பேசினார்.
முடிவில் ஆசிரியர்கள் அனைவரும் 10 கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.