தென் மாவட்டத்தில் புகழ்பெற்றது எட்டயபுரம் ஆட்டுச்சந்தை வாரம்தோறும் சனிக்கிழமை கூடும் இந்தச் சந்தைக்கு ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகளும் வியாபாரிகளும் ஆயிரக்கணக்கில் வருகை தருவது வழக்கம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சந்தை சனிக்கிழமை தோறும் கூடும் என்றாலும் வெள்ளிக்கிழமை மாலை விவசாயிகளும் வியாபாரிகளும் வந்து விடுவதால் சந்தை பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் எட்டயபுரம் மாட்டு சந்தையில் அருப்புக்கோட்டையை சேர்ந்த விவசாயி பொன்வேலன் என்பவரிடம் மூன்று நபர்கள் கூட்டாக வந்து ரெண்டு வெள்ளாடு வாங்கியுள்ளனர். விவசாயி சொன்ன விலைக்கு ஆடு வாங்கியவர்கள் எந்தவித பேரமும் பேசாமல் 19000 புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுக்களாக கொடுத்துள்ளனர். 13,000 ரூபாய்க்கு விலை போக வேண்டிய ஆடுகள் 19000 ரூபாய்க்கு விற்பனையான போதிலும் பணத்தை வாங்கிக் கொண்ட விவசாயி பொன்வேலவனுக்கு திடீரென சந்தேகம் ஏற்படவே உஷார் அடைந்து ஆட்டுச் சந்தையின் நுழைவு வாயிலில் இருந்த குத்தகைக்காரர்களிடம் பணத்தை கொடுத்து பரிசோதித்துள்ளார்.
அந்த 500 ரூபாய் நோட்டுகளில் கலர் வித்தியாசம் தெரியவே எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாலை 4:00 மணிக்கு பாரா டூட்டியில் இருந்த போலீஸ் மாரியப்பன் என்பவர் துரிதமாக செயல்பட்டு உயர் அதிகாரிகளுக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார். டிஎஸ்பி அசோகன். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி. எஸ்ஐ மாதவ ராஜா அடங்கிய போலீஸ் டீம் ஆட்டு சந்தைக்கு விரைந்து சென்று அங்கு பதுக்கி இருந்த கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த வெம்பக்கோட்டை மாரிமுத்து 35 வயது என்பவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதை கண்ட கள்ள நோட்டு கும்பல் அங்கிருந்து நைசாக நழுவி தாங்கள் வந்திருந்த tata sumo காரில் தப்பி சென்றனர். பிடிபட்ட நபர்களிடமிருந்து தகவலின் பேரில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற எட்டையாபுரம் தனிப்பட்ட போலீஸ் டீம் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை. சாத்தூர் கோட்டைப்பட்டி. விஜய கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்த சந்திரன் 30 வயது,சுப்புராஜ் 40 வயது, அழகர்சாமி 40 வயது, முனியன் 36 வயது, காளிமுத்து 36 வயது ஆகிய அஞ்சு பேரு சுற்றி வளைத்து கைது செய்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விடுபட்ட நபர்கள் மும்பையை சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவர் மூலம் மதுரையில் கள்ள நோட்டுகளை வாங்கி இருப்பதும் கள்ள நோட்டுக்களை தமிழ்நாடு முழுவதும் ஆடு, மாடு சந்தைகளில் புழக்கத்தில் விட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட நபர்களிடம் இருந்து புத்தம் புது 500 ரூபாய் நோட்டுகள் ரூ. 8000 மற்றும் டாடா சுமோ வாகனத்தை பறிமுதல் செய்து எட்டையாபுரம் தனிப்பட்ட போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.