கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை செல்லும் வழியில் உள்ள காடம்பாறை அருகாமையில் உள்ள பகுதியில் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்பு அப்பகுதி மக்கள் மற்றும் வால்பாறை பாரதிய ஜனதா கட்சி செயலாளருமான திரு பாலாஜி மற்றும் பொதுமக்கள் இடையே நீண்ட நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு கோவிலுக்கு தரிசனம் செய்ய அனுப்பி விட்டனர். அப்பகுதி மக்கள் வருடா வருடம் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவது வழக்கம். புதிதாக சட்டத்தை உருவாக்கிய வனவிலங்கு காப்பகத்தார் அவர்களின் குல தெய்வங்களை வணங்க விடாமல் வைத்தனர்.
நீண்ட நேரத்துக்கு பிறகு காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் வனவிலங்கு காப்பகத்தார் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பொதுமக்களுக்கு கோவிலுக்கு செல்ல அனுமதியளித்துள்ளனர். திடீரென்று புது கட்டுப்பாடுகள் கொண்டுவருவது மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.