
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஜமீன் ஆதியூரில் கடந்த 3-ம் தேதி பசுங்கன்று ஒன்றை சிறுத்தை கடித்துக் கொன்றது. வனத்துறையினர் கண்காணிப்பு மேற்கொண்டு சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த நிலையில், கூண்டு வைத்தும் பிடிக்க முடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு கோவிந்தனூரில் சிறுத்தை நடமாட்டம் கண்டதாக கூறப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 14) புரவிபாளையம் மயில்சாமி தோட்டத்துச சாலைக்குள் புகுந்த சிறுத்தை, பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியின் கழுத்தை கவ்வி கொன்றது. சப்தம் கேட்டு மயில்சாமி வெளியே வந்ததும் சிறுத்தை தப்பியோடியது.
தொடர்ந்து இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் மக்கள் பீதி அச்சமடைந்துள்ளனர்.
பெண்கள், குழந்தைகள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். ஆடு, மாடுகளை மேய்க்கச் செல்லவும் மக்கள் தயங்குகின்றனர். இரவு நேரங்களில் வந்த சிறுத்தை தற்போது அதிகாலையிலும் நடமாடுவது மக்களிடையே மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தையை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் வணத்துறையினர் கண்காணிப்பு தீவிரப் படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.











