
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஊஞ்ச வேலம்பட்டியில் ரேஷன் அரிசியை மாவாக அரைத்து கேரளாவுக்கு கடத்தும் கும்பல்! அரிசி ஆலையில் நூற்றுக்கணக்கான மூட்டைகள். ரேஷன் அரிசிகள் பதுக்கல் பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கண்டுகொள்ளாத காரணத்தால் சட்ட ஒழுங்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் அரிசி ஆலையில் ஏ டி எஸ் பி தலைமையில் போலீசார் அரிசி ஆலை சோதனை செய்தபோது நூற்றுக்கணக்கான ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் ரேஷன் அரிசி மாவு மூட்டைகள் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த ரேஷன் அரிசி ஆலை கடந்த 5 வருடங்களாக இயங்குவது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாமூல் கொடுத்து இயங்குவதாக கூறுகின்றனர் அந்த பகுதி மக்கள் சிவில் சப்ளை தாசில்தார்க்கும் தெரியாமலா 5 வருடமாக ஆலை இயங்குகிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் மேலும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவனுக்கும் இந்த ரேசன் அரிசி அரவை ஆலைக்கும் தொடர்பா ? எனக் கேள்வி எழுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.











