
கோவில்பட்டியில் பொதுமக்களின் வீட்டுமனை பட்டாக்கள் கிராமக்கணக்கிற் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திரா காலனி பகுதியில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு சுமார் ஐந்து மாதங்களுக்கு முன்பு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் வழங்கப்பட்டுள்ள வீட்டுமனை பட்டாக்களை கிராம கணக்கிற் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக வழங்கப்பட்டுள்ள பட்டாக்களை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யுமாறும் மற்றும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் பாபு தலைமையில் வட்டாட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதில், மாவட்ட நிர்வாக குழு சேதுராமலிங்கம், தாலுகா உதவி செயலாளர் இராமகிருஷ்ணன், நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட குழு ரெங்கநாதன், நகர உதவி செயலாளர்கள் விஜயலட்சுமி, அலாவுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜகுமார்.











