வேப்ப மரத்தில் கோரிக்கை மனுவினை கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்!!

இனாம் மணியாச்சி கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் – அப்பகுதியில் உள்ள மக்களுக்கு வாறுகால் அமைத்து தர வேண்டும் – என்பதை வலியுறுத்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலர்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவில்பட்டி -ஜூலை 23,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி கிராமத்தில் உள்ள கண்மாய் கரையை சேதப்படுத்தி குழாய் அமைத்து நேரடியாக கழிவுநீர் கலப்பது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், கண்மாய் கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை அமைக்க வேண்டும், அப்பகுதியில் வாறுகால் வசதி செய்து தர வேண்டும் வலியுறுத்தி கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வேப்ப மரத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் தங்களது கோரிக்கை மனுவினை கட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ் பேரரசு கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், சமூக ஆர்வலர்கள் ராஜேஷ் கண்ணா, பரமசிவம், ஓய்வு பெற்ற சர்வேயர் குருசாமி, கண்ணன், செந்தில்குமார் விஜயராஜ் ,சேது ராமசாமி , தமிழ் பேரரசு கட்சியின் மாவட்ட பொருளாளர் குமார், நகரச் செயலாளர் மூக்காண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts