
சுதந்திர தினத்தை முன்னிட்டு,கோவில்பட்டி ஆசியா ஃபார்ம் நிறுவனத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சமூக செயற்பாட்டாளர் ராஜேந்திரன் கொடியேற்றினார். கொடியேற்றி முடித்தவுடன் ஆசியா ஃபார்ம் நிறுவனத்தின் சார்பில் லாயல்மில் காலனியில் மரக்கன்றுகள் நடப்பட்டு, பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் முனைவர்.சம்பத்குமார் கலந்து கொண்டு சுதந்திர தின உரையாற்றினார்.
இந்நிகழ்விற்கு பாபு அவர்கள் தலைமை தாங்கினார். கணேஷ் பேக்கரி ரவி மாணிக்கம் மற்றும் ஆசியா கேண்டி நிறுவனத்தின் தலைவர் பத்மா பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் மருத்துவர்கள் சஞ்சய் சிவநாரயணன், ஆத்மிகா சஞ்சய் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துமுருகன், இலுப்பையூரணி முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் ஆசியா ஃபார்ம் நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.









