
கோவையில் கல்லூரி மாணவர்கள் பலர் கஞ்சா போதை பொருள் பயன்படுத்துவதாகவும், தனியார் விடுதிகளில் அவற்றை விற்பனை செய்வதாகவும் போலீசுக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் அதிரடியாக எஸ் பி கார்த்திகேயன் அவர்களின் உத்தரவின் பெயரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். செட்டிபாளையம் மதுக்கரை பகுதிகளில் மாணவர்கள் தங்கி உள்ள விடுதிகளில் சுமார் 410 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது சிலர் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போது, செட்டிபாளையம் பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா பொருட்களுடன் 3 வாலிபர்கள் பிடிபட்டனர். மாணவர்களை காக்கும் விதமாக கோவை எஸ்பி கார்த்திகேயன் அவர்கள் இதை தடுக்க உத்தரவிட்டார்.
உடனடியாக காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்வு பரபரப்பாக செட்டிபாளையம் மற்றும் போத்தனூர் பகுதியில் பேசப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-நிருபர்கள் குழு.











