பொள்ளாச்சி அருகே தோட்டத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெட்டி படுகொலை!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை பொள்ளாச்சி தாராபுரம் சாலையில் குடிமங்கலம் பகுதியில்
அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பணியாற்றி வந்த தந்தை மற்றும் மகனுக்கு இடையே பண தகராறு இருந்து வந்தது. இந்த பிரச்சனையில் நேற்று இரவு தந்தை மகனை கொல்ல அரிவாளுடன் துரத்தியதாக கூறப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து அவசர உதவி எண் 100க்கு அழைத்து தகவல் சொன்னதின் பேரில் அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த குடிமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் தனது ஓட்டுநருடன் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சண்முகவேலை வெட்டி கொலை செய்துள்ளனர். மேலும் ஓட்டுநருக்கும் லேசான வெட்டுகாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மகனையும் தந்தை வெட்டி உள்ளார்‌.‌

மூர்த்தி மற்றும் மகன்கள் மணிகண்டன் தங்கப்பாண்டி ஆகிய மூவரையும் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டி ஐ ஜி, எஸ் பி நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் உடுமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts