
தூத்துக்குடி மாவட்ட எட்டையாபுரம் அருகில் உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இப்பேரணியை பள்ளி மேலாண்மை குழு தலைவி கீதா துவங்கி வைத்தார். போதைப் பொருள்களால் ஏற்படும் சமுதாய கேடுகள் உடல் நிலை கேடுகள் பற்றி தலைமை ஆசிரியர் இப்ராஹிம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
நமது குடியிருக்கும் பகுதி கிராமத்தை போதை மது இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என்று ஆசிரியர் இந்திராணி எடுத்துரைத்தார். இப்பேரணியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு உறுதிமொழி மேற்கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











