
மூணாறில் கடந்த சில நாட்களாகவே நான்கு யானைகள் சேர்ந்த கூட்டம் ஷான்டோஸ், குண்டலை, எல்லப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது.

இன்றைய தினம் காலை, அந்த யானைக் கூட்டம் எல்லப்பட்டி சாலையை கடந்து குண்டலை கிளப்பில் நுழைந்து, அங்கு உணவு தேடி காட்டு மாடுகளின் கூட்டத்துடன் சேர்ந்து புல்களை மேய்ந்து கொண்டது.

இந்த காட்சி சாலை வழியாக பயணித்து சென்ற மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-மணிகண்டன் கா, மூணாறு,கேரளா.











