விளாத்திகுளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தத்தனேரி மகாலிங்கம் நினைவாக மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதியுதவியுடன் ஸ்காட் நிர்மான் நிறுவனம், விளாத்திகுளம் அறம்செய் அறக்கட்டளைகள், சத்யசேவாசமிதி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முகாமை தத்தனேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உமாசங்கர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார் . தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் பரிசோதனை மற்றும் சிகிச்சையளித்தனர்.மொத்தம் 140 பேர் பரிசோதனை செய்ததில் 44 பேர் கண்புரை நோய் உள்ளவர்கள் என கண்டறியப்பட்டு முகாம் அன்றே சிகிச்சைக்கு தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு அறுவை சிகிச்சை, தங்கும் வசதி அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது

முகாமில் ஸ்காட் நிர்மான் நிறுவனம் சுந்தர்ராஜ், அறம் செய் அறக்கட்டளையை சேர்ந்த சித்துராஜ், சந்திரசேகர், சமூக ஆர்வலர் மேடைச் சேர்மன், நெடுங்குளம் ஊராட்சி செயலாளர் சேவகப்பெருமாள் உட்பட தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை சத்தியசேவாசமிதி ஒருஙகிணைப்பாளர் இளையராஜா மாரியப்பன் செய்திருந்தார் . அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts