
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் மினி ஆட்டோ காலை உணவு திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டு வைத்திருக்கிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனால் இந்த வாகனங்கள் காலை உணவு திட்டத்திற்காக நகராட்சி ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லை. இவை அனைத்தும் சொந்த வாகனம் போல் பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். காலை உணவுத் திட்டத்திற்கு டெண்டர் வாடகை வாகனங்கள் பயன்படுத்துகின்றனர். ஒரு சில நேரங்களில் இந்த டெண்டர் வாகனங்கள் மிகவும் தாமதமாக செல்கின்றது என்ற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
நகராட்சி வாகனங்கள் அப்படியே பயன் படுத்தாமல் நிற்கிறது. படித்தும், வாகனங்கள் ஓட்டத் தெரிந்தும், ஓட்டுநர் உரிமம் பெற்றும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தும் வேலையில்லாமல் நிறைய வாகன ஓட்டுனர்கள் அன்றாடம் கிடைக்கும் கட்டட வேலை, ஒரு சில வேலைகளுக்கு செல்கின்றனர். இவர்களை வைத்து இந்த வாகனங்களை இயக்கினால் நகராட்சிக்கு செலவுகள் கம்மியாகும். இது போன்ற காண்டாக்ட் வாகனங்களை தவிர்க்கலாம்.
காலை உணவு திட்டத்திற்கு நகராட்சி வாகனங்களை தான் பயன் படுத்த வேண்டும்,அந்த வாகன ஓட்டுனர் குடும்பத்திற்கு ஒரு பயனாக இருக்கும், இப்பகுதி படித்தவர்களுக்கு ஒரு வேலை வாய்ப்பு கிடைக்கும் என வேலையில்லா வாகன ஓட்டுனர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கிறார்கள்.
வால்பாறை நகராட்சி ஆய்வாளர், ஆணையர்கள் மற்றும் எம்மி மேனேஜர் எஸ் ஓ இவர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.











