கோவில்பட்டியில் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மரியாதை செய்த அரசு பள்ளி மாணவிகள் – ரோட்டரியின் மதிப்புமிகு தலைமை ஆசிரியர் விருது வழங்கல்!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவில் பள்ளி மாணவிகள் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மரியாதை செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாடு முழுவதும் செப்டம்பர் 5ம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆசிரியர்களுக்கு கிரீடம் சூட்டி மரியாதை செய்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியை ஜெயலதாவுக்கு ரோட்டரியின் மதிப்புமிகு தலைமை ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
ரோட்டரிமாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்துச்செல்வம்,ஆசியா பார்ம்ஸ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி உதவி தலைமையாசிரியை கிரேனா அனைவரையும் வரவேற்றார்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதாவுக்கு ரோட்டரியின் மதிப்புமிகு தலைமை ஆசிரியர் விருதினை ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் வழங்கி பாராட்டி பேசினார்.

இதில் ஆசிரியர்களுக்கு பள்ளி மாணவிகள் கிரீடம் சூட்டி மரியாதை செய்தனர்.

இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்து முருகன், தாமோதரக் கண்ணன்,மணிகண்டன்,பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் உள்பட ஆசிரியர்கள் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இசை ஆசிரியை அமல புஷ்பம் நன்றி கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

-ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts