
கழுகு படத்திற்கு வண்ணம் தீட்டி கழுகு இனங்களை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்ட மாணவர்கள்.
கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் முத்தானந்தபுரம் தெருவில் உள்ள கொண்டைய ராஜு ஓவிய பயிற்சி பள்ளியில் சர்வதேச கழுகுகள் தின விழா நடந்தது.
நாடு முழுவதும் செப்டம்பர் முதல் சனிக்கிழமை அழிந்து வரும் கழுகு இனங்களை பாதுகாக்கவும்,சுற்றுச்சூழலில் கழுகுவின் பங்களிப்பை பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சர்வதேச கழுகுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவில்பட்டியில் நடந்த விழாவில் ஓவிய பயிற்சி பள்ளி மாணவர்கள் கழுகின் படத்திற்கு வண்ணம் தீட்டி கழுகு இனங்களை பாதுகாக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
ஓவிய பயிற்சிபள்ளி நிர்வாகி முருகபூபதி,சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்க செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார்.
கழுகுவின் படத்திற்கு வண்ணம் தீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கண்ணன், நடராஜன், கருப்பசாமி உள்பட மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ரோட்டரி சங்க உறுப்பினர் பூல்பாண்டி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.











