
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் திருநெல்வேலி பொருநை மருத்துவமனை சார்பில் அத்தை கொண்டான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து மாபெரும் மருத்துவ முகாம் நடந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் திருநெல்வேலி பொருநை மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை மருத்துவர் சிதம்பர தானு, எலும்பு முறிவு மருத்துவர் பால சுகுமார்,மகளிர் மருத்துவம் மருத்துவர் மோனிகா,பொது மருத்துவம் மருத்துவர் நாபூல் உள்பட மருத்துவர்கள் கலந்து கொண்டு 150க்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ்,முன்னாள் உதவி ஆளுநர்கள் சீனிவாசன்,முத்துச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரோட்டரி சங்க செயலாளர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் கலந்து கொண்டு பொது மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பேசினார்.
இதில்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் கண்ணன், முத்து முருகன், பூல்பாண்டி, ராஜேந்திரன்,நடராஜன், ராஜமாணிக்கம், அருண்,கம்மவார் சங்க தலைவர் மாரிச்சாமி, செயலாளர் ராமசுப்பு, பொருநை மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க பொருளாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.











