
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று (செப்டம்பர் 22, 2025) மூன்று மாணவிகள் ஆசிரியைகள் மிரட்டிய காரணத்தால் சாணிப்பவுடர் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரும் தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சமூக இயக்கங்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மனுவில் மாணவிகளை தற்கொலைக்கு தூண்டிய ஆசிரியைகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு சாதிய மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் ஆசிரியர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க சுற்றறிக்கை அனுப்பியிருந்த நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புற அரசுப் பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை கழிவறை மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்ய வைப்பது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவை காரணம் காட்டி அரசுப் பள்ளிகளை மூடி வருவதால் கிராமப்புற மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி கிடைப்பது சவாலாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-𝗠.சுரேஷ்குமார்.











