மங்கலம் அருகே விற்பனைக்காக சுமார் 2 கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது!!

மங்கலம்: போலீசார் மங்கலத்தை அடுத்த கணபதிபாளையம் பகுதியில் தீவிர ரோந்து சுற்றி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்பனை செய்வதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் தீவிர சோதனை செய்ததில் கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன்(26) என்பவரின் வீட்டில் சுமார் 2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்ப்பட்டது.

இதைத்தொடர்ந்து பிரபாகரனை கைது செய்த மங்கலம் போலீசார் அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பிரபாகரனின் சொந்த ஊர் தஞ்சாவூர் ஆகும்‌. தற்போது திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே கணபதிபாளையம் பகுதியில் வசித்து வருவது தெரியவந்தது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts