
கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரி தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு – 2 தீயணைப்பு வண்டி மூலமாக தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் கூடுதல் பஸ் நிலையம் அருகே சாலை ஓரத்தில் லாரிகள், சரக்கு வாகனங்கள் நிறுத்துவது வழக்கம், அந்த வகையில் தூத்துக்குடியை சேர்ந்த தனியார் கண்டெய்னர் நிறுவனத்தில் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வரும் கொலக்கட்டாங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், தூத்துக்குடியில் இருந்து சிவகாசிக்கு அட்டை ஏற்றிக்கொண்டு சென்று இறக்கிவிட்டு கூடுதல் பஸ் நிலையம் அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்திவிட்டு ஊருக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் கூடுதல் பஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் லாரியின் முன் பகுதி மற்றும் டயர்கள் தீ பிடித்து பற்றி எரிந்து உள்ளது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் விரைந்து 2 வண்டிகள் மூலமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நுரை கலந்த தண்ணீரை வைத்து தீ யை அணைத்தனர். லாரியின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாழ்வாக இருந்த மின்சார வயர் காற்றுக்கு கண்டெய்னர் லாரி மீது பட்டு உரசி தீ பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.











