
தூத்துக்குடி மாவட்டம் : 14.09.2025
காவலர் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களை அழைத்து புத்தகங்கள் மற்றும் தேர்வு குறித்து அறிவுரை வழங்கிய முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்விற்கு தயாராக கொண்டிருக்கும் முத்தையாபுரம் பகுதிகளைச் சேர்ந்த முதல் நிலை பட்டதாரிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகள் 20 நபர்களுக்கு போட்டி தேர்வுக்கு உதவியாக நோட்டு மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றை முத்தையாபுரம் காவல் நிலையத்தில் வைத்து இன்று (14.09.2025) காவல் ஆய்வாளர் திரு. ஜீவமணி தர்மராஜ், சார்பு ஆய்வாளர்கள் திரு. ராமகிருஷ்ணன், திரு. முகிலரசன் ஆகியோர் வழங்கி தேர்வுக்கு தயாராவது குறித்து அறிவுரைகள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.
மேற்படி ஏழை எளிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான புத்தகங்களை வழங்கி தேர்வு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊக்கப்படுத்திய முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் மற்றும் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப ஆகியோர் வெகுவாக பாராட்டினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பரணி பாலா.











