கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வட்டார வள மையம் உள்ளிட்ட இடங்களில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டி தொடங்கி நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த ஆண்டுக்கான கலைத் திருவிழா போட்டிக்கான மையக்கருத்தாக சுற்றுச்சூழலும், பாரம்பரியமும் என்ற தலைப்பில் நடைபெற்றது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பாரதிதாசன் செய்திருந்தார். வட்டார கல்வி அலுவலர்கள் மெஹராஜ் பானு, இர்ஷாத் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமிர்தம் மாலதி தொடங்கி வைத்தார்.
கலைத் திருவிழா போட்டியில் தமிழ் பாடல் ஒப்புவித்தல் போட்டி, கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், ஆங்கிலப் பாடல் ஒப்பிவித்தல் போட்டி, மாறுவேட போட்டி, களிமண் பொம்மை செய்தல், பேச்சுப்போட்டி, திருக்குறள் ஒப்பித்தல், மெல்லிசை தனிப்பாடல், தேசபக்தி பாடல், மாறுவேட போட்டி, நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம், ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், தனி நபர் நடிப்பு, களிமண் சதை வேலைப்பாடு, மணல் சிற்பம், ரங்கோலி, செவ்வியல் இசை, நாட்டுப்புறப் பாடல், வில்லுப்பாட்டு, கிராமிய நடனம், பரதநாட்டியம், பாவனை நடிப்பு, பல குரல் பேச்சு, கேலிச்சித்திரம், பானை ஓவியம், மணல் சிற்பம், காகித கூழ் பொருள் செதுக்கு சிற்பம், வில்லுப்பாட்டு, நாதஸ்வரம், புல்லாங்குழல், தெருக்கூத்து, வீதி நாடகம், தனி நபர் நடிப்பு, பல குரல் பேச்சு, இலக்கிய நாடகம் உள்ளிட்ட தலைப்புகளில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றது. மாணவ மாணவிகள் கலைத் திருவிழாவில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார். மாணவச் செல்வங்கள் இயற்கை சார்ந்தும் விவசாயம் சார்ந்தும் சுற்றுச்சூழலை பாதுகாக்க கூடிய விழிப்புணர்வு பாடல்களை சிறப்பாக பாடி அசத்தினார்கள்.

போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களாக தலைமை ஆசிரியர்கள் தியாகராஜன், பழனிவேல், சின்ன ராஜா, ஆசிரியர்கள் ரஹமதுல்லா, ராஜா மாணிக்கம், தமிழரசன் உள்ளிட்டோர் போட்டிகளை ஒருங்கிணைத்தார்கள். கலைத்திருவிழா போட்டியில் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் . மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் கலையரசன், கலையரசி என்ற பட்டம் வழங்கப்படும். கலைத் திருவிழா போட்டிகளில் மாணவர்களுடைய கற்பனை திறன், அறிவாற்றல், சிந்திக்கும் மேம்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts