தேர்தல் புறக்கணிப்பு! – ஆட்சியருக்கு மனு

தேர்தல் புறக்கணிப்பு வாக்காளர் அடையாள அட்டை ரேஷன் அட்டையை அரசிடம் ஒப்படைக்க முடிவு உபாசி பகுதி தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பொதுமக்கள் மாணவர்கள் கூட்டாக ஆட்சியருக்கு மனு

கோவை மாவட்டம் வால்பாறை உபாசி எஸ்டேட் சாலைகள் கடந்த பல ஆண்டுகளாகப் பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​குண்டும் குழியுமான சாலையில் இயக்கப்படும் பேருந்துகள் எந்நேரம் பழுதாகி நிற்கும் என்ற அச்சம் மற்றும் வனவிலங்கு அச்சுறுத்தல் காரணமாகப் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அவசர மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

​இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் வால்பாறை அரசு அதிகாரியிடமும் பலமுறை முறையிட்டும் பல போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. அருகிலுள்ள சின்னக்கல்லார், பெரிய கல்லார் சாலைகள் மட்டும் அடிக்கடி புதுப்பிக்கப்படுவது உபாசி பகுதி மக்களிடையே மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தச் சிரமங்களைச் சுட்டிக்காட்டி உபாசி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், அலுவலர்கள், மாணவச் செல்வங்கள், பொதுமக்கள் என அனைவரும் கூட்டாகக் கையொப்பமிட்ட மனுக்களைத் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்குத் தபால் மூலம் அனுப்பியுள்ளனர்.

​மனுவில் எங்கள் சாலைகளை உடனடியாகச் சீரமைத்து அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் இல்லையெனில் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்து எதிர்வரும் தேர்தலை நாங்கள் புறக்கணிப்போம். எங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் மற்றும் குடும்ப அட்டைகள் அனைத்தையும் மொத்தமாக அரசிடம் ஒப்படைத்து விடுவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
​அடிப்படை வசதிகள் கூடப் பூர்த்தி செய்யப்படாததால், அப்பாவி அடித்தட்டு மக்கள் படும் துயரங்களை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் உடனடியாகச் சாலைப் பிரச்சினையைச் சரி செய்ய வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர் வால்பாறை

-P.பரமசிவம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts