
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை அருகேயுள்ள நாலாபுரத்தில் செயல்படும் தனியார் தேயிலைத் தோட்ட நிறுவனங்களால் தொழிலாளர்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உழைப்புக்கேற்ற ஊதியம், அடிப்படை வசதிகள் மற்றும் 20% போனஸ் கூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. வனவிலங்கு தாக்குதல்களால் தொழிலாளர்கள் உயிரிழக்கும் அபாயமும் இப்பகுதியில் தொடர்கிறது.
மேலும் எஸ்டேட் நிர்வாகம் விதிகளை மீறி அரசு அதிகாரிகளின் உதவியுடன் விடுதிகள் ‘ஃபாஸ்ட் ஃபுட்’ கடைகள் போன்றவற்றை அமைத்து, நில ஆக்கிரமிப்பு மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகிறது. இதனால் அப்பாவித் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
இந்தச் சூழலில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நலன் காக்கக் கோரி சிஐடியு (CITU) தொழிற்சங்கம் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நாலாபுரத்தில் உள்ள தனியார் தோட்ட நிறுவனங்களைக் கையகப்படுத்தி வால்பாறைப் பகுதி வளர்ச்சிக்கும் அங்குள்ள காலநிலைக்கேற்ற மாற்றுத் தொழில்களைக் கொண்டு வருவதற்கும் நிரந்தர வீடு இல்லாத சாமானிய மக்களுக்கு நிலம் வழங்கவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சார்பில் துண்டறிக்கை வெளியிடப்பட்டது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்குச் சிஐடியு சார்பில் முதல் அழைப்பிதழாகத் துண்டறிக்கை வழங்கப்பட்டது. தொழிலாளர்கள் பாதிப்புகள் குறித்து எம்.பி.யிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் இக்கோரிக்கைகளைபரிசீலனை செய்வதாகவும் அவற்றை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் உறுதியளித்தார்.
மேலும், இப்பகுதியில் இருக்கும் அடித்தட்டு மக்களைப் பாதுகாக்கத் தன்னால் முடிந்த அளவு உதவி செய்வதாகவும் உறுதி அளித்தார் சிஐடியு சங்கம் வெளியிட்டுள்ள இத்துண்டறிக்கையானது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சமூக அக்கறை கொண்ட மக்களிடையே ஒருவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்துத் தொழிற்சங்கத் தலைவர்கள், வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அப்பாவி மக்களைப் பாதுகாக்க தமிழக அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் சிஐடியு அழைப்பு விடுத்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.











