அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட உரங்கள் தர கட்டுப்பாட்டு பிரிவு உதவி இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர். குடோனில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயற்கை உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அந்த குடோன் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. விருதுநகரில் உள்ள இயற்கை உர கடையில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த இயற்கை உரங்கள் (biostimulant) ஊத்துப்பட்டியில் உள்ள குடோனில் வைத்திருந்ததாக அதிகாரிகளிடம் குடோன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். எந்தவித அனுமதியும் இன்றி உரங்களை பதுக்கி வைத்து இருப்பது வேளாண்மை உரங்கள் தர கட்டுப்பாட்டு சட்டத்தின் படி சட்டவிரோதம் என்பதால் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts