குண்டும் குழியுமாக உள்ள சாலை!! வாகன ஓட்டுநர்கள் சிரமம்!!

பொள்ளாச்சி, வால்பாறை:

சோலையார் எஸ்டேட் ஜெயஸ்ரீ குரூப் லிமிடெட் சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதால்,  அவ்வழியாக சோலையயார் டாம், புதுக்காடு, ஆன முடி, நல்ல முடி, முத்து முடி, தோனி முடி, முடிஸ் செல்லும் அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளது.

அப்பகுதியில் பலமுறை வாகனங்கள் பழுதாகி அரசு பேருந்துகள் நடு சாலையில் நின்று உள்ளது. 108 வாகனங்கள், அரசு பேருந்துகள், பள்ளி குழந்தைகள் மிகவும் தாமதமாக செல்கின்றனர். இதனை கண்டித்து பலமுறை சாலை அமைப்பு ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஆய்வாளர் அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கை எடுப்பதில்லை.

அப்பகுதியில் மழை காலங்களில் விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. சாலையை பழுது நீக்கி தருமாறு அப்பகுதியில் வரும் வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள், தொழிலாளிகள் கோரிக்கையாக கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-விஜயகுமார், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts