
ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் மாதம் 14-ந் தேதி குழந்தை தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குழந்தைகள் தின விழா பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவர்கள் ஜவஹர்லால் நேரு வேடம் அணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பாட்டு, நடனம், பேச்சு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
முன்னாள் முதலமைச்சர், முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி அவர்களின் – 102 வது பிறந்த நாளை முன்னிட்டு, மற்றும் குழந்தைகள் தினமான இன்று ( 2024-2025 ) கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த சாதனையாளர் மாணவர்களுக்கு டாக்டர்.கலைஞர் அவர்களின் நினைவு கேடயம் மற்றும் பரிசு தொகையினை மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், இந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிகழ்விற்கு கோவில்பட்டி திமுக மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் மாயா உதவி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் தாமோதரன் கண்ணன், திமுக கழக நிர்வாகி நாகராஜன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரீஸ்வரன், பள்ளி மேலாண்மை குழு தலைவி செல்வி, விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் ரவீந்திரன், சுரேஷ்குமார் மற்றும் திமுக கிளைக் கழக செயலாளர் முத்து செல்வம், குருசாமி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.











