
கோவை மாவட்டம் போத்தனூர் 99 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் ஏழாவது வீதி கிழக்கில் வசிக்கும் சுப்பையா என்றவர் வீட்டில் நேற்று இரவு பூட்டை உடைத்து பீரோவில் இருந்த சுமார் 25 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று விட்டனர்.
தனது தாயார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருந்தார் சுப்பையா வீட்டிற்கு திரும்பி வந்ததும் பூட்டி இருந்த வீடு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்க்கும் பொழுது பீரோ உடைக்கப் பட்டிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ.

உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொள்வதோடு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தடவியல் நிபுணர் உதவியோடு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப் படுத்தி வருகின்றனர். நகை விலை கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோவை மாநகர துணை ஆணையர்,உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர், துணை ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். துணை ஆணையர்,உதவி ஆணையர் அவர்கள் கூறுகையில்,
பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் மூன்றாவது கண் என கூறப்படும் கேமராக்கள் பொருத்த வேண்டும், இரவு நேரங்களில் வீட்டின் முகப்புகளில் விளக்குகளை போட்டு வைக்க வேண்டும் ,சந்தேகப்படும் வகையில் புதிய நபர்கள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வந்தால் உடனடியாக காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்குவதோடு இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்கு காவல் துறையோடு மக்களும் ஒத்துழைப்பு வழங்கி விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.











