கோவில்பட்டியில் அதிமுக சார்பில் SIR படிவம் பூர்த்தி செய்து தரும் அலுவலகம் திறப்பு விழா – கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்பு!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகரில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு SIR படிவம் பூர்த்தி செய்து தரும் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் *கடம்பூர் ராஜூ* எம்எல்ஏ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் அதிமுக சார்பில் பூர்த்தி செய்து தரும் SIR படிவங்களை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர், கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் *எம்.ஆர்.வி.கவியரசன்* சிறப்பாக செய்திருந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விழாவில் நகர செயலாளர் விஜயபாண்டியன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, முன்னாள் நகர அவைத் தலைவர் குட்டி, இளைஞர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் இன்ஜினியர்கள் தாமோதரன், அமிர்தராஜ், பிரியா, நிஷா, கவிதா, ஜெனிபர், விஜி பிரசன்னா, கீர்த்தி, சூரியா, தினேஷ்குமார், அருண், சக்தீஸ்வரன், மணிகண்டன், கவிபாரதி, சபேஸ், பாலசிவா, ராஜரிஷி, முகேஷ், மணிகண்டன் மற்றும் அதிமுக முகவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்குகாக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts