
கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் கழகப் பொதுச்செயலாளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டி தேவனாம்பாளையத்தில் சிறப்பு பூஜைகள் மற்றும் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேவனாம்பாளையம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கியது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அருளாசியுடன் 2026-ல் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என வேண்டி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.
சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான மாண்புமிகு திரு S.P. வேலுமணி அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கழகப் புரட்சித்தலைவி அம்மா பேரவைச் செயலாளர் திரு. R.B. உதயகுமார் அவர்களின் ஆலோசனையின்படி முன்னாள் அமைச்சரும் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான திரு. பொள்ளாச்சி V. ஜெயராமன் முன்னிலையில் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
வழிபாட்டைத் தொடர்ந்து கோவை புறநகர் தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் திரு. S. விஜயகுமார் ஏற்பாட்டில் 45-வது வாரமாகத் திண்ணைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கழகத்தின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தேவனாம்பாளையம் ஊராட்சி பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஒன்றிய, நகர மற்றும் பேரூராட்சி அம்மா பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ் குமார்.











