
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை ஐயர் பாடி போஸ்ட் ஆபீஸ், மின்வாரிய அலுவலகம் அருகாமையில் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கு டாட்டா காபி நிறுவனத்திற்கு உரம் ஏற்றி வந்த லாரி வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் அலட்சியத்தால் விபத்துக்குள்ளானது. முன்னுக்கு பின்னாக ஓட்டிவந்த சுற்றுலா பயணிகளின் கார் லாரி டிரைவர் ஆரன் அடித்தும் கண்டு கொள்ளாமல் ஒட்டியதால் லாரி டிரைவர் பிரேக் அடித்ததும் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. பெரும் விபத்துக்கள் ஏற்படாமல் லேசான காயத்துடன் ஓட்டுநர் தப்பித்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகளவு கனரக வாகனங்களுக்கும் அரசு பேருந்துகளுக்கும் வழி விடுவதில்லை. ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு செல்ஃபி எடுப்பதும் போட்டோ எடுப்பதும் வழக்கமாக உள்ளது.
இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. சுற்றுலா வந்து மகிழ்வதில் எந்த தப்பும் கூறுவதில்லை ஆனால் ஆங்காங்கு வாகனங்களை நிறுத்திவிட்டு கனரக வாகனங்களுக்கும் இதர வாகனங்களுக்கும் வழி விடுவதில்லை என்பது தான் இப்போது பிரச்சினையாக உள்ளது.
வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி வைப்பதை தவிர்த்தால் பெரும் விபத்துக்கள் தவிர்க்கலாம் என இப்பகுதி வரும் கனராக வாகனம் ஓட்டுனர்களும் மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள்களும் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.











