கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி!!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஒவியப் போட்டி நடைபெற்றது. மாணவ மாணவிகள் ஆர்வமுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஓவியம் வரைந்தனர். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ரகமத்துல்லா பேசும்பொழுது;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது இயற்கை வளங்கள்,:

மனித நலம் மற்றும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் அமைப்பைப் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும். இதில் மாசு கட்டுப்பாடு, கழிவு மேலாண்மை, இயற்கை வளங்களைப் பேணுதல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைத்தல் ஆகியவை அடங்கும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கிய அம்சங்களான மாசு கட்டுப்பாடு, காற்று, நீர், நிலம் ஆகியவற்றில் ஏற்படும் மாசுபாட்டைக் குறைத்தல் கழிவுகள், இரசாயனங்கள். இயற்கை வளங்களான நீர், காடுகள், கனிமங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல்.கழிவு மேலாண்மை குப்பைகளை மறுசுழற்சி செய்தல், குறைத்தல் மற்றும் பாதுகாப்பாக அகற்றுதல்.

உயிரினப் பாதுகாப்பு:

அழிந்து வரும் தாவர மற்றும் விலங்கினங்களைப் பாதுகாத்தல்,காலநிலை நடவடிக்கை, புவி வெப்பமடைதலைக் குறைக்கவும்,சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் குறித்தும்,மனித ஆரோக்கியத்தைப் பேணுதல்,இயற்கை சமநிலையைப் பராமரித்தல்,எதிர்கால சந்ததியினருக்காக வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பேசினார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மணிமேகலை சிந்தியா உள்ளிட்டோ செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts