
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வாகனங்கள் முன்பக்க கண்ணாடி உடைந்தும் பதிவு நம்பர் இல்லாமலும் பல நாட்களாக செயல்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த வாகனங்கள் போக்குவரத்து அதிகாரியிடம் பரிசோதனை செய்ததா இல்லையா என்று கூட சந்தேகமாக உள்ளது. வால்பாறையில் அதிகளவு வாகனங்களை பரிசோதனை செய்வதில்லை போக்குவரத்து அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.
வால்பாறையில் அதிக அளவு வாகனங்களை பரிசோதனை செய்தால் எப்சி, இன்சூரன்ஸ், டேக்ஸ், ரிஜிஸ்டர் நம்பர் ஆகியவை இல்லாமல் ஒரு சில வாகனங்கள் செயல்பட்டு தான் இருக்கிறது . இதனை வால்பாறை வரும் போக்குவரத்து அதிகாரி அவர்கள் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் . வால்பாறை நகராட்சி வாகனமே இந்த நிலையில் உள்ளது மற்ற வாகனங்களை எந்த நிலையில் தான் இருக்கும் என பொதுமக்கள் மத்தியில் கேள்விக் குறியாகவும் உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.











