வானரமுட்டி அருகே கல்லூரணியில் ரூ.5 லட்சத்தில் பயணிகள் நிழற்குடையை மாவட்ட கவுன்சிலர் G.பிரியா Dr.S.குருராஜ் Ph.D., திறந்து வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வானரமுட்டி பஞ்சாயத்து, கல்லூரணி கிராமத்தில், மாவட்ட கவுன்சிலர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சத்தில் புதிய நிழற்கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு பயணிகள் நிழற்குடையை ரிப்பன் வெட்டியும், கல்வெட்டை திறந்து வைத்தும் நிகழ்ச்சியினை சிறப்பித்தார்.
பின்னர் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிறகு புதிய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் வானரமுட்டி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஊர் நாட்டாமை முனியசாமி மற்றும் ஐகோர்டார் முன்னிலை வகித்தனர்.
திமுக மகளிர் அணி துணை செயலாளர் இந்திரா, கல்லூரணி திமுக கிளைச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.
ராமலிங்கபுரம் திமுக கிளைச் செயலாளர் மகேந்திரகுமார் ஒன்றிய பிரதிநிதி மந்திரமூர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்











