
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள அக்கா மாலையில் இருந்து வால்பாறைக்கு வரும் குடிநீர் குழாய் பதிப்பதற்காக குழிகளை தோண்டி விட்டு அப்படியே மூடாமல் விட்டு செல்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் அவ்வழியே செல்லும் அரசு பேருந்துகள்,லாரிகள் போன்ற வாகனங்களின் டயர்கள் குழிகளுக்குள்ளே சிக்கி மிகவும் சிரமத்துக்குள்ளாகி விடுகின்றனர். நேற்று மாலை அவ்வழியே வந்த ஒரு டூரிஸ்ட் வேன் சிக்கிக் கொண்டது. நீண்ட நேர சிரமத்துக்கு பிறகு அந்த வாகனத்தை மீட்டனர்.
குழிகளை மூடாமல் விட்டு செல்வதினால் வாகனங்கள் ஓட்டுவதற்கு மிகவும் சிரமமாக இருப்பதால் அப்பகுதியில் உள்ள குழிகளை மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-திவ்யக்குமார்.











