மூணாறில் குறைந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை!!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தென்னகத்தின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் கோடை வாசஸ்தலமாகிய மூணாறுக்கு பல தேசங்களில் இருந்தும் உள்ளூர் வாசிகளும் சுற்றுலா வருவது வழக்கம். அங்கு இருக்கும் காலநிலை மற்றும் இயற்கை எழிலை கண்டு ரசிக்க பல சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஆனால் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக கேரள சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. முந்தைய ஆண்டு விட இந்த ஆண்டில் இந்த மாதங்களில் எப்போதுமே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும். ஆனால் இந்த வருடம் இந்த மூன்று மாதத்தில் 30 சதவீத சுற்றுலாப் பயணிகளே வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு காரணம் ஆன்லைன் டாக்ஸி டிரைவர்களின் பிரச்சனைகளும், வரும் சுற்றுலா பயணிகள் தாக்கப்படுவதும், சரியான பாதுகாப்பு இன்மை காரணமாகவும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாலும், அதிகமான மழை பெய்வதாலும் சுற்றுலா பயணிகள் குறைந்துள்ளதாக கருதப்படுகிறது.

ஆனால் மூணாறு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுலா பயணிகளின் வருகையை கொண்டே அமைந்துள்ளது. எனவே சுற்றுலா மேம்பாட்டை வலுப்படுத்த கேரள அரசு மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் சரியான நடைமுறையை பின்பற்றி போதுமான பாதுகாப்பு அளித்து சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts