
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் அக்கட்சியின் செயலாளர் பி. பரமசிவம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தக் கடிதத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் கோரிக்கைகள் பின்வருமாறு;-
மதிப்பிற்கும் மரியாதைக்குரிய தமிழக முதல்வர் அவர்களுக்கு
எங்கள் அமைப்பின் சார்பாகவும் வால்பாறைப் பொதுமக்கள் சார்பாகவும் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாங்கள் அப்பாவி, சாமானிய, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களாவோம். குறைவான சம்பளத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் வனவிலங்குகளின் அச்சுறுத்தல் மத்தியில் எங்கள் எதிர்கால வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
*வாழ்வாதாரப் பாதுகாப்பிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்*
இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாக உள்ளது அடிக்கடி ஏற்படும் வனவிலங்கு மோதல்களால் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.
நாங்கள் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும்போது, விலை மதிப்பற்ற எங்கள் வாக்குகளை அளித்து ஆட்சி அதிகாரத்தில் உங்களை அமர வைக்கிறோம். ஆனால் எங்களை தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்களிக்கும் இயந்திரமாக நினைக்காதீர்கள். அரசு வனவிலங்குகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம், விலைமதிப்பற்ற மனித உயிருக்குக் கொடுப்பதில்லை என்பதே வால்பாறையில் நிலவும் எதார்த்தமான உண்மை.
*தற்காலிக நிதி உதவிகள் மட்டுமே தீர்வாகாது*
வால்பாறைப் பகுதியில் அடிக்கடி வனவிலங்கு மோதலால் உயிரிழப்பு ஏற்படும்போது அரசும் மக்கள் பிரதிநிதிகளும் ஒவ்வொரு முறையும் தாக்குதலுக்கு ஆளான குடும்பங்களுக்கு நிதி உதவிகளை மட்டும் வழங்குகிறீர்கள். ஆனால் இந்த துயரத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கு எந்தவொரு உறுதியான முயற்சியும் எடுக்காமல் இருப்பது பெரும் வேதனையளிக்கிறது.
*பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை*
இனியாவது வனவிலங்குகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைப்போல எங்களைப் போன்ற வாக்களிக்கும் சாமானிய மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தயவுசெய்து கீழ்க்கண்ட நிரந்தரத் தடுப்பு நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும்
𝟭,அகழியும் மின்வேலியும் தொழிலாளர்கள் குடியிருப்புச் சுற்றிலும் அடர்ந்த அகழியும் (Trench) மின்வேலியும் அமைத்துப் பாதுகாக்க வேண்டும்.
𝟮,புதர்களை அகற்றுதல் எஸ்டேட் பகுதிகளில் இருக்கும் புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
𝟯,வனத்தின் உள்ளே பயிர் வளர்ப்பு அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்குகள் விரும்பி உண்ணும் பயிர்களைப் பயிரிட்டு, அவை வனத்தை விட்டு வெளியே வராமல் பாதுகாக்க வேண்டும்.
𝟰,கண்காணிப்பு மற்றும் கூடுதல் காவலர்கள் வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அங்கங்கே கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும், அதிக எண்ணிக்கையிலான வனப் பாதுகாவலர்களை நியமிக்க வேண்டும்.
*எங்கள் கடமை மற்றும் எதிர்பார்ப்பு*
விலைமதிப்பற்ற உயிர்கள் எளிதில் வனவிலங்கு தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படும்போது, குடும்பத்தாரும் உற்றார் உறவினர்களும் சொல்ல முடியாத வேதனை அடைகின்றனர். பொதுமக்களுக்கும் அச்சம் ஏற்படுகிறது.
மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி, வருங்காலங்களில் மக்களுக்குப் பயனுள்ள பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதும் எங்கள் வேலை என்பதைத் தாங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
இனியாவது காலம் தாழ்த்தாமல் கேரளாவைப் போல மனித உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து, வால்பாறை மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பொதுநலத்துடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கேட்டுக்கொள்கிறோம்.
இதுவே கடைசியாக இருக்கட்டும்.
நன்றி
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
பி.பரமசிவம் செயலாளர்.
வால்பாறைப் பொதுமக்கள் சார்பாக அனுப்பப்பட்ட இந்தக் கடிதத்திற்கு விரைவில் தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-𝗠.சுரேஷ்குமார்.




