
கோவில்பட்டி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் பணிபுரியும் அனைத்து வகைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘சாரணர் சாரணியர்’ பயிற்சி கோவில்பட்டி தொடக்கக் கல்வி அலுவலர் பாஸ்கரன் தலைமையில் ஏழு நாட்கள் வீரவாஞ்சிநகர் யூ.பி மெட்ரிக்குலேசன் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வாழ்க்கைக் கல்வி,சுய ஒழுக்கம்,தேச பற்று,சமத்துவம்,தலைமைப்பண்பு போன்ற நற்பண்புகளை மாணவர்களுக்கு வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு பள்ளிகளிலும் சாரணர் சாரணியர் இயக்கம் உருவாக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சியை தேசிய தலைமை குருளை பயிற்சியாளர் கார்த்திகாயினி மற்றும் மாவட்ட பயிற்சி ஆணையாளர் வித்யா ஆகியோர் வழங்கினார்கள்.கோவில்பட்டி கல்வி மாவட்ட சாரணர் சாரணியர் ஒருங்கிணைப்பாளர் மோகன் பயிற்சியினை நெறிப்படுத்தினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











