​கோவை கொடிசியாவில் பரபரப்பு! – 80 அடி உயர ரோலர் கோஸ்டர் பழுதாகி நின்றது! – அந்தரத்தில் தவித்த 22 பேர் மீட்பு!!

கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்று வரும் பொருட்காட்சியில் நேற்று இரவு ராட்சத ரோலர் கோஸ்டர் இயந்திரம் பழுதாகி நின்றதால் அதில் பயணம் செய்த 22 பேர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தரத்தில் உயிருக்குப் போராடினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேற்று இரவு கொடிசியா பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. அங்குள்ள 80 அடி உயர ராட்சத ரோலர் கோஸ்டரில் சிறுவர்கள் பெண்கள் என 22 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அப்போது ரோலர் கோஸ்டர் உச்சியை எட்டியபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவு அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக பாதியிலேயே நின்றது.

சுமார் 80 அடி உயரத்தில் செங்குத்தான நிலையில் பெட்டிகள் நின்றதால் அதில் இருந்த பயணிகள் கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அலறினர் இதைக் கண்டு கீழே நின்றிருந்த அவர்களின் உறவினர்களும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். மைதானம் முழுவதும் பெரும் பதற்றம் நிலவியது.

தகவலறிந்து பீளமேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் தீயணைப்புத் துறையினர் நவீன ஏணிகள் மற்றும் பாதுகாப்பு கயிறுகளைப் பயன்படுத்தி ஒவ்வொருவராகப் பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு 22 பேரும் காயமின்றி மீட்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொருட்காட்சி ஏற்பாட்டாளர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் ராட்டினத்தின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ்கள் முறையாகப் பெறப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள்
செய்தியாளர்
-𝗦𝗧𝗔𝗥 சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts