​வால்பாறையில் புகையில்லா போகி நகராட்சி நிர்வாகம் முக்கிய வேண்டுகோள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை நகராட்சி மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில் இந்த ஆண்டு புகையில்லா போகி பண்டிகையைக் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

​இது குறித்து வால்பாறை நகர மன்றத் தலைவர் அழகுசுந்தரவல்லி செல்வம் மற்றும் நகராட்சி ஆணையாளர் குமரன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவத
​கழிவுகளை எரிக்க வேண்டாம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீடுகளைச் சுத்தம் செய்யும் போது சேரும் தேவையற்ற பழையப் பொருட்கள் மற்றும் கழிவுகளைத் தெருக்களில் போட்டு எரிக்க வேண்டாம். பிளாஸ்டிக், டயர்கள் மற்றும் இதரக் கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களின் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும்.

பொதுமக்கள் தங்கள் வீட்டில் சேரும் கழிவுப் பொருட்களைக் குடியிருப்புப் பகுதிகளிலேயே வைத்திருக்க வேண்டும். நகராட்சித் தூய்மைப் பணியாளர்கள் மூலம் வால்பாறை நகரம் மற்றும் எஸ்டேட் வாரியாகச் சென்று அந்தக் கழிவுகள் முறையாகச் சேகரிக்கப்படும். இதற்குப் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

புகையில்லா போகி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 14) அன்று வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்தத் தொடக்க விழாவில் இப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
​இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

​சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முன்வந்துள்ள நகராட்சித் தலைவர், ஆணையர் அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-P. பரமசிவம் வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts