தடுப்புச் சுவர் இல்லாத சாலை! – விபத்துக்கள் ஏற்படும் முன்னே அமைக்க வேண்டும்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள நல்லா காத்து பகுதியில் சோலையார் செல்லும் வழி  கான்க்ரீட்  சாலை அமைத்தும் தடுப்பு சுவர் அமைக்காமல் உள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே இரண்டு முறை விபத்துக்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியில் தடுப்புச் சுவர் இல்லாததனால் வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களை தெரிவதில்லை. அதை போல் அப்பகுதிகளில் விபத்துக்கள் நேரிடும் பகுதியாக மாறி உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தினால் வாகமங்கள் சாலையில் வரும் பொழுது திடீரென்று மாடு போன்ற விலங்குகள் சாலை நடுவில் வந்து நிற்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். இரு தினங்களுக்கு முன்னாடி  இரு சக்கர வாகனம்  ஓன்று அவ்வழியே வந்த மாடு  சாலையின்  நடுவில் நின்றதால் விபத்துக்குள்ளானது. வாகன ஓட்டுனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

அப்பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து கொண்டு வருகிறது. இதனைக் கண்டு அப்பகுதியில் தடுப்புச் சுவர்  அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts