எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்தை முறியடிக்க பாஜக ஊடகப்பிரிவு தயார் ஆக வேண்டும் – பாஜக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா!!

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பாஜகவின் ஊடகப்பிரிவு கன்னியாகுமரி பெருங்கோட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் அன்னபூர்ணா அவர்கள் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மதுரை மத்திய மாவட்ட தலைவர் சசி அவர்கள் கலந்து கொண்டார்.

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் NDA கூட்டணி வெற்றி பெரும் நோக்கில் ஆலோசனைகள் நடைபெற்றன.

கூட்டத்தில் பேசிய அன்னபூர்ணா அவர்கள், “சட்டமன்றத் தேர்தலில் ஊடகப்பிரிவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

1 ) கட்சியின் சாதனைகள், மத்திய அரசின் நலத்திட்டங்கள் மற்றும் மக்கள் நல நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு தெளிவாக கொண்டு செல்லப்பட வேண்டும்.

2 ) சமூக ஊடகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் அனைத்தையும் திறம்பட பயன்படுத்தி கட்சியின் செய்திகளை விரைவாக பரப்ப வேண்டும்.

3 ) எதிர்க்கட்சிகள் பரப்பும் தவறான தகவல்களுக்கு உடனடி பதில் அளித்து உண்மையை வெளிப்படுத்துவது ஊடகப்பிரிவின் முக்கிய கடமையாகும்.

4 ) ஒவ்வொரு வாக்குச்சாவடி மட்டத்திலும் ஊடகப் பொறுப்பாளர்கள் செயல்பட்டு, வாக்காளர்களை நேரடியாக சென்றடையும் வகையில் தகவல் பரப்ப வேண்டும்.

5 ) இளைஞர்கள் மற்றும் முதல் முறையாக வாக்களிக்க உள்ளவர்களை ஈர்க்க புதுமையான மற்றும் ஈர்க்கக்கூடிய பிரச்சாரங்களை ஊடகம் மூலமாக கொண்டு செல்ல வேண்டும்

6 ) மேலும், உள்ளூர் பிரச்சினைகள், மக்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் தீர்வுகளை மையமாகக் கொண்டு உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

7 ) ஒழுங்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்ந்து செயல்படுதல் மூலம் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யலாம்” என அறிவுறுத்தினார்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் சிவராமன் சமூக ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ரத்தின முரளி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மாவட்ட துணை தலைவர் சரவணபெருமாள், மாவட்ட செயலாளர்கள் ஜெயராமன், பாலகிருஷ்ணன், மாரிமுத்து மற்றும் கன்னியாகுமரி, நாகர்கோவில் ஊரகப் பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஊடகப்பிரிவு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts