தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 40 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்!!

தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கடலோரப் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்பட உள்ளதாக க்யூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் ராமர் மற்றும் காவலர்கள் இருதயராஜகுமார், இசக்கிமுத்து, பழனி, பாலமுருகன், பேச்சிராஜா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இன்று (06.03.2026) அதிகாலை சுமார் 03.00 மணியளவில், தெர்மல் நகர் கடற்கரைக்குச் செல்லும் வழியில், காவல் நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த லோடு வேன் ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். அப்போது, போலீசாரைக் கண்டதும் வாகனத்தில் இருந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர்.

அந்த வாகனத்தைச் சோதனையிட்டதில், தலா 30 கிலோ எடை கொண்ட 44 மூட்டைகளில் பீடி இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காக வாகனத்தில் கொண்டு வரப்பட்ட இந்த பீடி இலைகளின் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 40 இலட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை உரிய விசாரணைக்குப் பின் சுங்கத்துறையினரிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts