
போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் நீண்ட நாட்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்றைய முன்தினம் போத்தனூர் வழியாக சென்று கொண்டிருந்த பெண் ஒருவரிடம் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் பெண் ஒருவர் கைவரிசை காட்டியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் தன்னுடைய செயினை பறி கொடுத்ததை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடனடியாக காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்தப் பகுதியில் உள்ள கேமராக்களை சோதனை இட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண்ணை கண்டுபிடித்தனர்.
செட்டிபாளையம் ரோடு கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. உடனடியாக கிருஷ்ணா நகரில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட பொழுது ஏராளமான மணி பர்ஸ் கண்டெடுக்கப்பட்டது. இவர்தான் செயின் பறிப்பு மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்டார் என்று தெரிந்தவுடன். காவல்துறை அதிகாரிகள் அந்தப் பெண்ணை நேற்று காலை காவல் நிலையத்திற்கு கூட்டி சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.











