கோவை அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது….

கோவை ஒப்பணக்கார கோயம்புத்தூர் அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஈகை திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவையிலும் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒப்பணக்கார வீதியிலுள்ள அத்தர் ஜமாத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.இஸ்லாமிய மாதங்களில் ஒன்பதாவது மாதமான ரமலான் மாததில் குர் ஆன் உலகிற்கு இறைவனால் வழங்கப்பட்டது என்பது இஸலாமியர்களின் நம்பிக்கை.
இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பு இருத்தலை ரமலான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து , ஷவ்வால் மாதம் பிறக்கும் தினத்தை ரமலான் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.சிறப்பு தொழுகைக்கு பின்பு பித்ரா எனப்படும், தங்களுக்கு விருப்பமான பொருட்களை ஏழை எளிய மக்களுக்கு தானமாக கொடுத்தும் ஈகை திருநாளை கொண்டாடி வருகின்றனர்.

சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts