
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பணிகளுக்கான அனுமதி பெறவும் பறிமுதல் செய்யப்படும் பொருட்களைத் திரும்பப் பெறவும் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திலேயே உயர்மட்ட தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது தொடர்பாக P. பரமசிவம் கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்;
தற்போது வால்பாறை தொகுதி மக்கள் தேர்தல் தொடர்பான எந்தவொரு அனுமதியைப் பெற வேண்டுமானாலும் மலைப்பாதையில் உள்ள 40 ஊசி வளைவுகளைக் கடந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த நீண்ட பயணத்தால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
மலைப்பாதையில் மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தால்
பொதுமக்களுக்கு தேவையற்ற பணச் செலவு ஏற்படுகிறது.
அதிகப்படியான கால விரயம் மற்றும் மன உளைச்சல் உண்டாகிறது.
தொழிலாளர்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் உரிய ஆவணங்கள் இன்றி பணம் அல்லது பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டால்
அவற்றைச் சரியான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் திரும்பப் பெறுவதற்கும் தற்போது ஆனைமலைக்கே செல்ல வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன் கருதி தேர்தல் காலம் முடியும் வரை
வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்திலேயே அனைத்து அனுமதிகளையும் வழங்க வேண்டும்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் குறித்த ஆவணங்களைச் சரிபார்த்து அங்கேயே ஒப்படைக்க ஆவன செய்ய வேண்டும்.
இதற்காக வால்பாறையில் ஒரு உயர்மட்ட தேர்தல் அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் மலைப்பகுதி மக்களின் அலைச்சலையும் தேவையற்ற சிரமங்களையும் தவிர்க்க முடியும் என சி.பி.ஐ.(எம்) தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.











