கோவையில் ஆசியா நகை கண்காட்சி மற்றும் விற்பனை இன்று துவங்கியது.!!

 

கோவை: தென்னிந்தியாவின் முன்னணி நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026 சிறப்பு பதிப்பு கண்காட்சி மற்றும் விற்பனை, கோவையில் துவங்கியது. இந்த கண்காட்சி 14ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை, அவிநாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெறும் இக்கண்காட்சியானது, தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும். இதில் இந்தியாவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட முன்னணி நகை வடிவமைப்பாளர்கள் மற்றும் பிராண்டுகள் ஒரே இடத்தில் பங்கேற்று உள்ளனர்.

ஆசியா ஜுவல்ஸ் ஷோவின் 55-ஆவது பதிப்பாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில், தங்கம், வைரம், பிளாட்டினம், பாரம்பரிய நகைகள், திருமண நகைகள், பழமையான வடிவமைப்புகள், விலைமதிப்புமிக்க கற்கள் பதிக்கப்பட்ட நகைகள், குந்தன், ஜடாவ், போல்கி மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்ட பல்வேறு வகை ஆடம்பர நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நகை வடிவமைப்புகள் மற்றும் அரிய ரத்தினக் கற்களை பார்வையிட்டு தேர்வு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

பெங்களூரு, மும்பை, தில்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், சென்னை, கோவை மற்றும் ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களைச் சேர்ந்த முன்னணி நகை நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. கஜ்ராஜ் ஜுவல்லர்ஸ், ஸ்ரீ ஹரி ஜுவல்ஸ் அண்ட் ஆர்ட்ஸ், சேகல் ஜுவல்லர்ஸ், ஸ்ரீயான்ஸ் ஜுவல்ஸ், நேஹா கிரியேஷன்ஸ், ஜிவா ஜுவல்லரி, கற்பகம் ஜுவல்லர்ஸ், சன்சிட்டி ஜுவல்ஸ், டயமார்ன் ஜுவல்லரி, ஸ்வர்ண மந்திரா, எப்.ஜெட். ஜெம்ஸ், ஹவுஸ் ஆஃப் இப்ஹான், ரி வேரா டயமண்ட்ஸ், நிகார் ஜுவல்ஸ், பன்னா ஜுவல்லர்ஸ், ப்ரோஃபினி ஜுவல்ஸ், அபேகானி, நந்தா மஹதா ஜுவல்ஸ், காரா, அழகி ஜுவல்ஸ், எம்.டி. இம்பெக்ஸ், பாலாஜி பேர்ல்ஸ் மற்றும் புல்ஃபோர்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

இதுவரை பொதுமக்கள் அதிகம் காணாத பிரத்யேக நகை வடிவமைப்புகளும் இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியை ஹெச்.ஆர்.எஸ். மீடியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts