
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 3, வார்டு 23இல் உள்ள பகுதிகள் நெமிலிச்சேரி, ஜமீன் ராயப்பேட்டை. ஆகிய பகுதியில் செயல்படும் தண்ணீர் லாரிகள், நன்மங்கலம் ஏரி பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக நிலத்தடி நீரை உறிஞ்சி, வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த லாரிகள் நெமிலிச்சேரி பிரதான சாலை, ஏ.ஜி.எஸ். காலனி, போஸ்டல் நகர், படவட்டம்மன் கோயில், பிள்ளையார் கோயில் தெரு, குறிஞ்சி நகர், ஐஸ்வர்யா நகர், தாலுகா சாலை வழியாக 200 அடி ரேடியல் சாலைக்கு தினமும் ஒவ்வொரு லாரியும் குறைந்தது ஐந்து முறை சென்று வருகின்றனர்.
இதனால் இந்தப் பகுதியில் சாலைகள், பலமுறை போடப்பட்டும் வருடம் முழுதும் சேதமடைந்த நிலையிலேயே உள்ளத, மேலும் பல விபத்துக்கள் இந்த கனரக வாகனங்களால் ஏற்படுத்தப்படுகின்றன.
கடந்த மார்ச் மாதம் T 13, சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் லாரி உரிமையாளர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அந்த அறிக்கையில் காலையில் 6:00 மணியிலிருந்து 11.00 மணி வரைக்கும், மாலையில் 3.00 மணி முதல் 8.00 மணி வரை கனரக வாகனங்கள் கூறப்பட்ட தெருக்கள் வழியாக செல்வதற்கு தடை விதித்திருந்தார்.

இந்த நிலையில் இந்தத் தண்ணீர் லாரிகள் காவல்துறையின் அறிவிப்பை மீறி எல்லா நேரங்களிலும் இந்த தெருக்கள் வழியாக சென்று வருவதை காண முடிகிறது. இதனால் காலையில் பள்ளி வாகனங்கள் செல்லும் பொழுதும் மாலையிலும் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
T – 13, காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக இதற்கு நடவடிக்கை மேற்கொண்டு காலையிலும் மாலையிலும், நெமிலிச்சேரி அல்லது போஸ்டல் நகர் பகுதியில் ஒரு காவலருக்கு பணி ஒதுக்கி, இந்த குடிநீர் லாரிகளின் அட்டூழியங்களில் இருந்து குடிமக்களை காப்பாற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில் முருகன் கோவை தெற்கு.











