ராகுல் காந்தி அவர்களின் 56 வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜை!!

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி அவர்களின் 56 வது பிறந்த நாளை முன்னிட்டு பொள்ளாச்சி அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

நகரத் தலைவர் பி செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் ஆர் கோபாலகிருஷ்ணன்,மாவட்ட பொருளாளர் எஸ். ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை மாவட்ட முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.வி.கே நடராஜன் தலைமை தாங்கினார்.

மேலும் இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. மேற்படி நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவர்கள் சி. மோகன்ராஜ்,தேவகுமார் கராத்தே பஞ்சலிங்கம்,வி எஸ் ஆர் கே மோகன்,அன்சர் பாய்,பரணி பிரஸ் சிவசாமி,ஊடகப்பிரிவு பிரபு ராம்,வட்டாரத் தலைவர் ராமசாமி,சார்லஸ்,ஐ என் டி சி வீராசாமி.கிருஷ்ணமூர்த்தி,சுரேஷ்குமார்,ராம் கோபால்,ராம்ராஜ், அய்யாசாமி,நாகராஜ்,சுப்பு,ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் சேதுபதி, சர்புதீன்,மயில்சாமி, இரும்பு கடை நடராஜ், மூர்த்தி மற்றும் ஆட்டோ செல்வராஜ் ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-MMH

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts